நடிகைகளின் ஆபாச உடையால் சாதாரண பெண்கள் பாதிப்பு: ரச்சிதா காட்டம்

சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை ரச்சிதா. சமீபத்தில் இவரது நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் ‘ஃபயர்’ படத்தில் நடித்துள்ளார். ரச்சிதா கூறியது: சமூக வலைத்தளங்களில் சிலர் பிரபலமாக வேண்டுமென்று அரைகுறை ஆடையுடன் வீடியோ போடுவது குறித்து கேட்கிறீர்கள். அது அவர்களுடைய விருப்பம். ஆனால் அவர்களுடைய உடையை குறைத்து, தங்களை பிரபலமாக்கி கொள்ள வேண்டுமென்று அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, போடும் போஸ்ட்கள் சாதாரண பெண்களையும் பாதிக்கிறது.

பிரபலமாக வேண்டுமென்று சிலர் ஆபாசமாக உடை அணிகிறார்கள். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வீடியோ போட்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதால் தெருவில் போகும் பெண்கள் மீது அவர்களின் தவறான பார்வை விழுகிறது. இதனால்தான் பல பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆபாசமாக வீடியோ போடுபவர்கள் லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போடுகிறார்கள். எனவே லைக் போடுபவர்கள் அதை கடந்து சென்றால், நாம் என்ன செய்தாலும் இவர்கள் கண்டு கொள்வதில்லை என ஆபாச உடை அணிந்து வீடியோ போடுவது குறைத்து விடுவார்கள் என்றார்.

Related Stories: