மகா சிவராத்திரி அன்று கண்விழித்தால் உண்மையில் பலன் உண்டா ?

மற்ற எல்லா மாதங்களிலும் சிவராத்திரி தினம் வந்தாலும் மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரி தினம் தனி சிறப்பு வாய்ந்ததாகும். நமது நாட்டில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்திலும் சில விரத முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் மகா சிவராத்திரி தினம் இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்து வழிபடும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய விரத முறையால் உண்மையில் நமக்கு பலன் உண்டா ?. அப்படியாயின் எது போன்ற பலன் உண்டு போன்ற பல தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள். விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது மகா சிவராத்திரி தினம் மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப் பெரும் உறுதுணையாக இருக்கிறது.

அற்புதமான அந்த நாளில் விண்ணில் இருந்து மனித வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் நவகோள்கள் மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. வானியல் அறிவியல் படி பார்க்கும் போதும் ஒரு வருடத்தில் ஒன்பது கோள்களும் ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் வருகின்ற நாளாக மகா சிவராத்திரி தினம் வருகிறது. இந்த இயற்கை அற்புதம் மிகுந்த நாளில் யோகிகள், சித்தர்கள் போன்றோர்கள் இரவெல்லாம் உறங்காமல் இருந்து தங்கள் உடலில் இருக்கும் குண்டலினி சக்தியை மேலெழும்பச் செய்து இறையனுபவம் மற்றும் ஞான நிலை பெற்றனர்.

யோகாசனங்கள், தியானம் போன்ற கலைகளை பயிலாதவர்கள் கூட இந்த மகா சிவராத்திரி தினத்தில் உறங்காமல் கண் விழித்து சிவனை தவிர மீதி எதையும் நினைக்காமல் சிவ சிந்தனையிலேயே இருப்பதால் ஞானானுபவத்தை தருகின்ற, நமது ஒவ்வொருவரின் உடலுக்குள் இருக்கின்ற குண்டலினி சக்தி இயங்கி நம்மை இறைவன் பால் கொண்டு செல்வதை, நாம் உணர முடியும் என்கின்றனர் அனுபவம் பெற்ற சிவயோகிகள். ஆன்மீக ரீதியாக பார்க்கும் போது பிறந்தோம், சாப்பிட்டோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்கிற உறக்கத்தில் இருக்கும் நிலை கொண்ட சராசரி மக்களின் வாழ்க்கை வாழாமல், இனி எத்தகைய பிறவிகளும் எடுக்காமல் சிவனில் நாம் கரைந்து பிறவாமை பேறு பெற விரும்புபவர்கள் வாழ்வில் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க இந்த மகா சிவராத்திரி விரதம் உதவுகிறது.

Related Stories: