பயாஸ்கோப் விமர்சனம்

படித்து பட்டம் பெற்ற சங்ககிரி ராஜ்குமார், வேலைக்குச் செல்லாமல், சினிமா கனவுகளுடன் கிராமத்திலேயே இருக்கிறார். அவருக்கு சித்தப்பா என்றால் உயிர். அவரைப் பற்றி வீட்டிலுள்ளவர்கள் ஜோசியம் பார்க்கும்போது, அவர் பிச்சைதான் எடுப்பார் என்று ஜோசியர் சொல்கிறார். இதனால் மனம் வெறுத்த சித்தப்பா, தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் ஜோசியர்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொந்தப் படம் தயாரிக்கிறார். அதற்கு வரும் தடைகளை தாண்டினாரா என்பது மீதி கதை.

முழுக்க, முழுக்க கிராமத்து மண்வாசனையை மட்டுமே அறிந்த கூலித்தொழிலாளர்களை வைத்து இப்படத்தை உருவாக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள். அவர்தான் படத்திலும் இயக்குனர் மற்றும் நடிகர். அனைவருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் நேரத்தில் அவர் படும் அவஸ்தைகள், ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவா ரத்தினம், பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா ஆகியோரது நடிப்பு சிறப்பு. சத்யராஜ், சேரன் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.

முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாஜ்நூர் பின்னணி இசை பலே. படம் தயாரிப்பது சுலபம்; அதை வெளியிடுவது என்பது, போன உயிரை திரும்பக் கொண்டு வருவது போன்றது என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். தியேட்டரில் வெளியான பிறகு Aha Find ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Related Stories: