ராகி அப்பம்

தேவையானவை:

ராகி (கேழ்வரகு) மாவு - அரை கப்,

கோதுமை மாவு - ஒரு கப்,

கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - அரை  கப்,

தயிர் - கால் கப்,

வெல்லம்  - ஒன்றரை கப்,

எண்ணெய் - கால் கப்,

நெய் - கால் டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,

சமையல் சோடா - கால் டீஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றா கச் சேர்த்து சலிக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் வெல்லப்பாகு, தயிர், ஏலக்காய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். அத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.

Related Stories: