அந்தநாள்: விமர்சனம்

திரைப்பட இயக்குனர் ஆர்யன் ஷாம், தனது புதிய படத்தின் கதை விவாதத்துக்காக, கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பஞ்சமி பங்களாவுக்கு செல்கிறார். அவருடன் ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோரும் இருக்கின்றனர். அப்போது ஓஜோ போர்டு வைத்து, அதன் மூலமாக ஒரு அமானுஷ்ய சக்தியுடன் உரையாடுகின்றனர். ஆனால், அந்த விளையாட்டை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இரவில் அனைவரும் தூங்கும்போது, வீட்டுக்குள் விஸ்வரூபம் எடுக்கும் அந்த அமானுஷ்ய சக்தி, அனைவரையும் கடுமையாகத்தாக்கி பயமுறுத்துகிறது. இதனால் பயந்து நடுங்கிய அவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர். ஆனால், யாராலும் வெளியே செல்ல முடியவில்லை. முகமூடி மனிதன் ஒருவன் அவர்களைப் பின்தொடர்கிறான். இறுதியில் ஆர்யன் ஷாம் மற்றும் குழுவினர் தப்பித்தார்களா? அமானுஷ்ய சக்தி என்ன? முகமூடி மனிதன் யார் என்பது மீதி கதை.

முகமூடி மனிதனிடம் சிக்கித்தவிக்கும் ஆர்யன் ஷாம் தனது கேரக்டரை உணர்ந்து, இருவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். நரபலியை மையமாக வைத்து இயக்கிய வீவீ கதிரேசன், மூட நம்பிக்கைகளுக்கு அதிகமாக துணை போகாமல்,
சில காட்சிகளில் பார்வையாளர்களை மிரட்டியிருக்கிறார்.

இசை அமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ப மிரட்டியுள்ளது. திகில் காட்சி களை ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். நிறைய காட்சிகளை இன்னும் கூட அழுத்தமாகப் படமாக்கி இருக்கலாம்.

Related Stories: