புகை, மது விழிப்புணர்வு வீடியோ: இடம்பெறாத திரு. மாணிக்கம்

சென்னை: ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி ‘திரு.மாணிக்கம்’ படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். வரும் 20ம் தேதி ரிலீசாகிறது. நந்தா பெரியசாமி கூறியது: நந்தா பெரியசாமி கூறுகையில், ‘ஆதங்கம், ஆற்றாமை, தவிப்பு, தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். படங்களின் துவக்கத்தில் மது, புகைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ படம் காட்டப்படும்.

இந்த படத்துக்கு அது தேவையில்லை என சென்சார் கூறிவிட்டது. அந்த அளவுக்கு படத்தில் எந்த காட்சியிலும் புகையோ, மதுவோ, வேறு போதை பொருள்களையோ பயன்படுத்தவில்லை. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர். மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது.

Related Stories: