சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் பிரபாஸ்

ஐதராபாத்: சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்து வருகிறார் பிரபாஸ். இதுவரை இவர்கள் ஜோடியாக நடித்ததே இல்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. பிரபாஸ் கடந்த பல வருடத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கிரித்தி சனோன் போன்ற பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவரும் சமந்தாவும் இதுவரை ஒரே படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை. இந்த இருவரின் ரசிகர்கள் கூட அவர்கள் ஒரே படத்தில் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பிரபாஸ், சமந்தாவுடன் நடிக்காததற்குக் காரணம், இருவருக்கிடையிலான உயரப் பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

பிரபாஸ் 6.2 அடி உயரம், சமந்தா 5.2 அடி உயரம் மட்டுமே என்பதால் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தால் இந்த உயர வித்தியாசம் தெளிவாகத் தெரியும் என்பதால்தான் பிரபாஸ் அவருடன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் பிரபாஸ் நடித்தார். இதில் சமந்தா தான் இயக்குனரின் சாய்ஸாக இருந்தார். ஆனால் அவர் வேண்டாம் என பிரபாஸ் மறுத்துவிட்டார். தனக்கு ஜோடியாக நடிப்பவர் தனது உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் கவனமாக இருப்பார். அதனால்தான் சமந்தாவை அவர் வேண்டாம் எனக் கூற காரணமாகும்.

Related Stories: