இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 8, சனி - சஷ்டி விரதம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீமத் அருணந்திதம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை. திருவள்ளூர் வசந்த உற்சவ அங்குரார்ப்பணம். திருமாகாளம் சோமயாஜி யாகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் திருவீதியுலா. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. அரண்ய கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சுபானந்தா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Advertising
Advertising

ஜூன் 9, ஞாயிறு - சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய விருஷப வாகனத்திலும், அம்பாள் தபசுக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ருக்மணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 10, திங்கள் - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நந்தினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 11, செவ்வாய் - சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தேரோட்டம். இரவு பூச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ராதை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 12, புதன் - திருவிடைமருதூர் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் யாளி வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தீர்த்தம். இரவு ரிஷபவாகன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் தேவகி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 13, வியாழன் - சுக்லபட்ச சர்வ ஏகாதசி. மைசூர் சத்குரு ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஜெயந்தி. மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி புறப்பாடு. சோழவந்தான் ஜனக மாரியம்மன் கமலாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பரமேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 14, வெள்ளி -  சுக்லபட்ச மஹாபிரதோஷம். மதுராந்தகம் கருடசேவை. சில தலங்களில் வைகாசி விசாகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சீதாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Related Stories: