ஆனால், மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கே வந்து சிக்கிக்கொள்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது, தம்பதிகள் உயிர் பிழைத்தார்களா? பல்வேறு காலக்கோடுகளை இணைக்கும் இருட்டு என்ன சொல்கிறது என்பது மீதி கதை. இது, 2013ல் வெளியான `கோஹரன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கணவன், மனைவியாக வரும் ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் பொருத்தமான ஜோடி. தங்களைச்சுற்றி நடக்கும் குழப்பமான சம்பவங்களை பதற்றத்துடன் எதிர்கொள்ளும் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளனர். விவேக் பிரசன்னாவின் வில்லத்தனம் எதிர்பாராதது. யோக் ஜேபி, ஸ்வயம் சித்தா, ஒரு காட்சியில் வரும் ஷாரா ஆகியோர் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
பயமுறுத்தும் இருள் நிறைந்த காட்சிகளைப் பல கோணங்களில் படமாக்கி, விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது கோகுல் பினோய் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். சரியாக கவனம் செலுத்தாவிட்டால் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் கதைக்கும், காட்சிகளுக்கும் எடிட்டர் பிலோமின் ராஜ் நேர்த்தியாக உழைத்துள்ளார். மனிதர்கள் சந்திக்கும் மாற்றங்களுக்கு அறிவியலும் முக்கிய காரணம் என்பதை மாறுபட்ட மேக்கிங்கின் மூலம் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி சொல்லியிருக்கிறார். ஜீவாவுடன் ஜீவா மோதும் சண்டைக்காட்சியில், ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷின் கடும் உழைப்பு தெரிகிறது. வெவ்வேறு கட்டங்களில் நடக்கும் கதையை இன்னும் எளிமைப்படுத்தி இருக்கலாம். பாடல்கள் வேகத்தடை போல் இருக்கின்றன.
The post பிளாக்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.