சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கும் லிடியன் நாதஸ்வரமின் இசை விழா

சென்னை: இசை அமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னையில் இசை விழா நடைபெற உள்ளது. அதில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை டிரம் ஃபீஸ்ட் 2024 என்ற இசை விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் 13ம் தேதியன்று நடைபெற உள்ளது. இவ்விழா பற்றி லிடியன் பேசும்போது, ‘இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார். ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ், திறமையுள்ள ஆனால் பலரால் அறியப்படாத இளை போன்றோரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த விழாவில் 32 கிராமி விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற வெற்றி பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அதிரடி இசை விழாவில் பல்வேறு பிரமுகர்கள் எதிர்பாராத வருகை தர இருக்கிறார்கள்’ என்று சொன்னார். தற்போது லிடியன் நாதஸ்வரம், மலையா ளத்தில் மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படத்திற்கு இசை அமைத்துள்ளார். இது ஒரு 3டி படமாகும். ‘பரோஸ்’ ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது.

 

The post சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கும் லிடியன் நாதஸ்வரமின் இசை விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: