முத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமசுவாமி கோயில் ராமநவமி வருட பெருந்திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ள வீரகோதண்டராம சுவாமி கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் ராமநவமி வருட பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 13ம் தேதி ராமநவமி வருட பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் கோவில் உபயதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

10வது நாள் நிகழ்ச்சியாக நேற்று வீரன்வயல் கிராமத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்து. பின்னர் மாலை தேர் வடம் பிடித்தல் நடந்தது. கோயிலிலிருந்து புறப்பட்டு தில்லைவிளாகம் கோவிலடி கடைதெரு, தெற்கு வீதி வழியாக மேற்கு வீதி சென்று பெட்ரோல் பங்க் வழியாக வேதாரண்யம் சாலை உட்பட முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories: