மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’. சயின்ஸ் ஃபிக்ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தியேட்டர் ஆடியன்ஸ்- ஓடிடி பார்வையாளர்களை என இருதரப்பினரையும் ஒருசேர திருப்திப்படுத்துவது எளிதல்ல! அதை ‘வெப்பன்’ செய்திருக்கிறது என்பதே இதற்கு சான்று” என்று கூறியிருக்கிறார்.
The post வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.