‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்

 

திரைக்கு வந்த `மான் கராத்தே’, `கெத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் எழுதி இயக்கியுள்ள படம், `ரெட்ட தல’. அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இப்படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து அருண் விஜய் கூறுகையில், ‘இதில் நான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளேன். ஒன்றரை வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். பாலா இயக்கத்தில் நடித்த ‘வணங்கான்’ படத்துக்கு பிறகு வேறொரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது இக்கதை என்னை தேடி வந்தது. இது ஒரு தியேட்டரிக்கல் படமாக இருக்கும்.

சாம் சி.எஸ் இசையில் ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்தில் நடித்தபோது, `ரெட்ட தல’ படத்தின் சில காட்சிகளை காண்பித்தேன். நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அப்போது ஒரு பாடலை பாடும்படி கேட்டேன். உடனே பாடி அசத்தினார்’ என்றார். சில காட்சிகளில் ‘வணங்கான்’ கேரக்டர் அருண் விஜய்யின் நடிப்பில் தென்பட்டதை கண்டுபிடித்த உதவி இயக்குனர் ஒருவர், உடனே அருண் விஜய்யிடம் சொன்னார்.

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, ‘ரெட்ட தல’ படத்தின் கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடித்த அருண் விஜய், ‘சில படங்களில் நான் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள், என் உடலை விட்டு மறைய சில நாட்களாகும். ‘வணங்கான்’ ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விடுபட்டு, ‘ரெட்ட தல’ படத்துக்காகவே என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்தேன்’ என்றார்.

 

Related Stories: