சென்னை: பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம், ‘ரெட்ட தல’. இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். மற்றும் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் எழுதி இயக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் நேத்தா, சாம் சி.எஸ்., விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.
படம் குறித்து அருண் விஜய் கூறுகையில், ‘கதை என்னை மிகவும் கவர்ந்தது. நான் ஏற்றிருந்த இரட்டை வேடம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. படத்தின் முக்கிய தூணாக இருப்பவர், எடிட்டர் ஆண்டனி. ஹீரோயின் சித்தி இத்னானி கடுமையாக உழைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், கிளைமாக்சும் பரபரப்பாக பேசப்படும். தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பது பிளஸ் பாயின்ட்’ என்றார்.
சித்தி இத்னானி கூறும்போது, ‘முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீசுக்கு பிறகு இடைவெளி விட்டுவிட்டேன். அது தவறு என்பதை புரிந்துகொண்டேன். இனி அதிக தேடலுடன் பணியாற்றுவேன். அருண் விஜய்யுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் சில நாட்களில் தமிழில் முழுமையாக பேச கற்றுக்கொள்வேன்’ என்றார்.
