கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாண சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மான் கோயிலில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி நேதாஜி சாலையில் உள்ள மயானத்தில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். இந்த சுவாமி ஊர்வலத்துடன் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காளிவேடம் அணிந்தும் உடன் சென்றனர்.

பின்னர் கோயில் வளாகத்தில் நடந்த தீ மிதி விழாவில் சுவாமியுடன் பக்தர்கள் இறங்கி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின்னர் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோயிலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இரவு 7 மணிக்கு சொற்பொழிவும், 10 மணிக்கு கும்ப பூஜை மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

Related Stories: