நயன்தாரா பரிந்துரையால் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிய சமந்தா

திருவனந்தபுரம்: நயன்தாராவின் பரிந்துரையின் பேரில் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறியுள்ளார் சமந்தா. நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நடப்பதற்கு சிரமம் ஏற்படும். மயக்கம் ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்தார். அவர் பூரண குணமடைய நடிகர், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நயன்தாராவும் அவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து நடித்தனர். இதில் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இந்நிலையில் நட்பு அடிப்படையில் கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளும்படி சமந்தாவுக்கு அறிவுரை வழங்கினார் நயன்தாரா. இதையடுத்து அவரது அட்வைஸை ஏற்றுக்கொண்டு சமந்தா கேரளா சென்றுள்ளார். அங்கு அவர் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: