விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ என்ற படத்தை எழுதி இசை அமைத்து இயக்கி முடித்துள்ளார், மிஷ்கின். விரைவில் திரைக்கு வரும் இப்படத்தை ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் நாசர், ஸ்ருதிஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை குறித்து கடந்த மே மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மிஷ்கின் வெளிப்படையாக பேசியிருந்தார்.
வாழ்க்கையை வெறுத்த ஹீரோ, கடைசியாக தனது மனைவியின் கல்லறையில் ஒரு செடி நடுவதற்காக ரயிலில் பயணிக்கிறார். அப்போது நடக்கும் சில விஷயங்களால் ஹீரோவுக்குள் மாற்றம் ஏற்பட்டு, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என கற்றுக்கொள்கிறார். இதை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது. இதில் இடம்பெற்ற ‘கன்னக்குழிக்காரா’ என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். கபிலன் எழுதியுள்ளார்.
