பாலிவுட்டில் குட் பை தோல்வி எதிரொலி ராஷ்மிகாவின் புது படம் ஓடிடியில் வெளியாகிறது

மும்பை: ராஷ்மிகா நடித்த ஒரு இந்தி படம் தியேட்டரில் தோல்வி கண்டதால், மற்றொரு இந்தி படம் ஓடிடியில் வெளியாகிறது. ராஷ்மிகா நடித்த இந்தி படம் குட் பை. இந்த படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது. ஆனால் ஒரே வாரத்தில் தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. படுதோல்வியை சந்தித்தது. இந்தியில் முதல் படமே படுதோல்வி அடைந்ததால் ராஷ்மிகா விரக்தியில் இருக்கிறார்.

இந்நிலையில் இந்தியில் ராஷ்மிகா நடித்த இரண்டாவது படம், மிஷன் மஜ்னு. இதில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இந்த படம் இந்திய ராணுவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள கதையாகும். ராஷ்மிகாவின் முதல் படம் தியேட்டர்களில் வெளியாகி வெற்றி பெறாததால், இந்த படத்தை பாலிவுட்டில் இதன் தயாரிப்பாளர் எதிர்பார்த்த விலையை கொடுத்து வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இல்லை. இதனால் இதை ஓடிடியில் விற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த படம் ஜனவரி 18ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: