டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் செவல காள

சென்னை: விங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பால் சதீஷ், ஜூலி தயாரிக்கும் பிரமாண்டமான படம், ‘செவல காள’. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஆரியன், சம்பத் ராம், மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்ய, பிரித்வி இசை அமைக்கிறார். சீர்காழி சிற்பி பாடல்கள் எழுத, ஸ்பியர்ஸ் சதீஷ் சண்டை பயிற்சி அளிக்கிறார். எஸ்.பி.பிரான்சிஸ், நிவேக் சுந்தர் எடிட்டிங் செய்கின்றனர். ஆண்டனி, ராபர்ட், சிவாஜி, வினோத் நடனப் பயிற்சி அளிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் பால் சதீஷ் கூறுகையில், ‘தவறு என்று தெரிந்தால், அதை யார் செய்தாலும் அவர்களை தண்டிக்க தயங்காதவர் ஹீரோ. மதுரை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் அவரது அண்ணனை பணக்காரர் ஒருவர் அவமானப் படுத்துகிறார். அதை ஹீரோ எதிர்க்கும்போது, வெளியூரில் இருந்து வந்த ஹீரோயினை சந்திக்கிறார். பிறகு ஹீரோ வாழ்க்கையில் நடக்கும் சில மாற்றங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி
வருகிறேன். இதற்கு முன்பு பல குறும்படங்கள் இயக்கிய அனுபவம் எனக்கு இருக்கிறது’ என்றார்.

Related Stories: