ராபர்ட், மீனாட்சியின் ‘செவல காள’

நடன இயக்குனரும், நடிகருமான ராபர்ட் ஹீரோவாக நடிக்கும் படம், ‘செவல காள’. முக்கிய வேடங்களில் ஆரியன், சம்பத் ராம், மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கின்றனர். விங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பால் சதீஷ், ஜூலி தயாரிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்ய, பிரித்வி இசை அமைக்கிறார். சீர்காழி சிற்பி பாடல்கள் எழுத, ஸ்பியர்ஸ் சதீஷ் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். எஸ்.பி.பிரான்சிஸ், நிவேக் சுந்தர் எடிட்டிங் செய்கின்றனர். ஆண்டனி, ராபர்ட், சிவாஜி, வினோத் நடனப் பயிற்சி அளிக்கின்றனர்.

மதுரை மேலூர், ஒத்தக்கடை, புது தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘மதுரை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணனை, பணக்காரர் ஒருவர் அவமானப்படுத்தியதை ஹீரோ எதிர்க்கிறார். அப்போது வெளியூரில் இருந்து அக்கிராமத்துக்கு வரும் ஹீரோயினை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது கதை. நான் யாரிடமும் உதவியாளராக இருந்தது இல்லை. குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை வைத்து ‘செவல காள’ படத்ைத இயக்கி வருகிறேன்’ என்றார்.

Related Stories: