மீண்டும் நடிக்க வருகிறார் மீனாட்சி சேஷாத்ரி

மும்பை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் மீனாட்சி சேஷாத்ரி. தமிழகத்தை சேர்ந்தவர் மீனாட்சி சேஷாத்ரி. இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பீகார் மாநிலத்தில்தான். பிறகு மாடலிங்கில் சேர்ந்து இந்தி சினிமாவில் 1983ல் பெயின்டர் பாபு என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்தியில் காயல், தாமினி, காட்டக் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழில் பாக்யராஜுடன் ரத்தத்தின் ரத்தமே, பாலசந்தர் இயக்கிய டூயட் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 55 வயது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் 1980களின் நடிகர், நடிகைகள் பங்கேற்ற ரீயூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இதில் மீனாட்சி சேஷாத்ரியும் பங்கேற்றார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘மீண்டும் எனது நாட்டுக்கு திரும்பி, எனது சினிமா குடும்பத்தாரை சந்திப்பதில் அதிக சந்தோஷம் அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தபடி இருக்கிறது. இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இப்போது எனக்கு அம்மா வேடங்கள்தான் பொருத்தமாக இருக்கும். வெப்சீரிஸ்களில் நடிக்கவும் வாய்ப்பு வருகிறது’ என்றார்.

Related Stories: