கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ‘ஹோம்பவுண்ட்’

98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படம் தேர்வாகியுள்ளது. இதில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ளனர். சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ், நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது. கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் சொல்லியிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு தகுதிபெற்ற ‘ஹோம்பவுண்ட்’ படத்தின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது எழுத்தாளர் பூஜா சாங்கோய்வாலா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், ‘அந்த படத்தை பார்த்தபோது, தயாரிப்பாளர்கள் எனது புத்தகத்தின் தலைப்பை தவறாக பயன்படுத்தியது மட்டுமின்றி, படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாக பிரதி எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தேன். இதில் அதன் காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு, நிகழ்வுகளின் வரிசை ஆகியவை அடங்கும்’ என்று கூறியுள்ளார். ‘ஹோம்பவுண்ட்’ படத்தின் திரைக்கதை 2022ல் எழுதப்பட்டது. இது அவரது நாவல் வெளியிடப்பட்ட ஒரு வருடத்துக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: