சென்னை: அப்பா மீடியா தயாரிப்பில் ‘எங்க அப்பா’ என்ற மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது. இதில் ஐந்து வயது குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷி நடித்துள்ளார்.லக்ஷனா ரிஷி இரண்டு வயதில் இருந்தே, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு படித்து வந்தார். அப்பாவை இறைவனாக நினைக்கும் குழந்தை. தந்தை மகள் அன்பு தான் கதை. எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, பிரியங்கா பாடியுள்ளார். கேரள வனப்பகுதி மற்றும் தமிழக எழில் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் ‘எங்க அப்பா’ ஆல்பம் வெளிவருகிறது.
The post எங்க அப்பா இசை ஆல்பம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
