ஹாரர் கதை: யூ ஆர் நெக்ஸ்ட்

சென்னை: ஐமேக் பிலிம்ஸ், ஸ்கை பிரேம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மொஹிதீன் அப்துல் காதர், மணி இணைந்து தயாரிக்கும் படம், ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. இதை ஷரீஃப் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகனாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். மற்றும் ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி நடிக்கின்றனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘இசைப்பேட்டை’ வசந்த் இசை அமைக்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்களை, பான் இந்தியா படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் குறித்து கே.எஸ்.ரவிகுமார் கூறுகையில், ‘இது மிகவும் வித்தியாசமான ஹாரர் கதை. எனது கேரக்டர் மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார். ரச்சிதா மகாலட்சுமி கூறும்போது, ‘இப்படம் இன்னமும் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது’ என்றார். ஷரீஃப் கூறுகையில், ‘இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். என்னையும், கதையையும் நம்பி தயாரிக்கும் மொஹிதீன் அப்துல் காதர், மணி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.

 

The post ஹாரர் கதை: யூ ஆர் நெக்ஸ்ட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: