வினோத நோயால் அவதிப்படும் பஹத் பாசில்

திருவனந்தபுரம்: வினோத நோயால் அவதிப்படுவதாக நடிகர் பஹத் பாசில் கூறினார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பஹத் பாசில். பழம்பெரும் மலையாள இயக்குனர் பாசிலின் மகனான இவர் தமிழில் ‘வேலைக்காரன்’, ‘விக்ரம்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவர் எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தில் சிறுவர் கிராம திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியது: மனிதனுக்கு எந்த நேரத்தில், எந்த நோய் வரும் என்று தெரியாது. எனக்கு (ஏடிஎச்டி) அட்டென்ஷன் டெபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிசார்டர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கவனக் குறைபாடு நோயான இது என்னுடைய 41வது வயதில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பெரும்பாலும் குழந்தைகளில் தான் இந்த நோய் அதிகமாக காணப்படும். வயது முதிர்ந்தவர்களில் அபூர்வமாகவே இந்த நோய் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வினோத நோயால் அவதிப்படும் பஹத் பாசில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: