ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை நேற்று நடந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயார் ரங்கநாச்சியார், படிதாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங் காரம் செய்விக்கப்படும். ஆனால் நவராத்திரியின் 7ம் திருநாள் மட்டும் இவரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்விக்கப்படும். இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவிக்க முடியும் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள்.

Advertising
Advertising

அன்று தாயாரின் திருவடியை வழிபடுவது கூடுதல் நற்பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று மாலை 5 மணி தொடங்கி இரவு வரை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் வசதிக்கென்று கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தன. தாயார் திருவடி சேவையன்று ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Related Stories: