திருச்சானூரில் சிறப்பு திருமஞ்சனத்துடன் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை

திருமலை: திருச்சனூர் பத்மாவதி தாயார் கோயிலில் 3 நாள் பிரதோஷத்தையொட்டி நேற்ற பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவம் நேற்றுமுன்தினம் அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. காலை பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாத சேவையுடன் துழில் எழுப்பப்பட்டு  சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திகளான பத்மாவதி தாயார் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு அக்னி பிரதிஷ்டை மற்றும் பவித்ர  மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மதியம் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் மஞ்சள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய பவித்ர உற்சவத்தில்  பக்தர்கள் 750 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். அதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இரண்டு வடை பிரசாதமாக வழங்கப்படும் என்று துணை செயலாளர் முனிரத்தினம் ரெட்டி தெரிவித்தார். இதில் கண்காணிப்பாளர் மல்லேஸ்வரி,  ஆலய இன்ஸ்பெக்டர் குருவையா மற்றும்  பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: