பூலாங்குளம் மங்களம்மன் கோயிலில் கொடை விழா

நெல்லை: பூலாங்குளம் மங்களம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பூலாங்குளம் மங்களம்மன் கோயிலில் கடந்த திங்களன்று சிறப்பு பூஜைகளுடன் கொடை விழா துவங்கியது. மறுநாள் மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு குற்றாலத்தில் இருந்து தீர்த்த நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால்குடம் எடுத்து வரும் வைபவம் நடந்தது. இரவு வில்லிசை, நையாண்டி மேளம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை, வாண வேடிக்கை முழங்க அம்மனுக்கு சாம கொடை விழா சிறப்பாக நடந்தது. மறுநாள் புதன்கிழமை காலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, நேர்த்திக்கடன் செலுத்துதல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை வரிதாரர் சார்பாக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: