எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி

சென்னை: ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கிசான், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் காணப்பட்டார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த போட்டோவைப் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு சிலர், அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட்டனர். இந்நிலையில், அந்த போட்டோ குறித்து ஜாக்கிசான் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள், ‘ஜாக்கி… இது உனது 70வது பிறந்தநாள்’ என்று நினைவூட்டினர். ஒவ்வொரு முறைஅந்த எண்ணை நான் கேட்கும்போது, எனது இதயம் நின்று இயங்கும். தற்போது எனக்கு 70 வயது ஆகிவிட்டதா என்ற பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும்போது, மற்றொரு விஷயம் நினைவுக்கு வரும். அதாவது, என் மூத்த சகோதரர் சம்மோ ஹர், ‘வயது கூடுவது என்பது அதிர்ஷ்டம் நிறைந்த விஷயம்’ என்று சொன்னார்.

எங்களைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கான வயது முதிர்வு எந்தளவுக்கு அதிர்ஷ்டமான ஒன்று என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. எனது லேட்டஸ்ட் போட்டோவை இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து, எனது உடல்நிலை குறித்து பெருங்கவலை அடைந்திருப்பதை அறிந்தேன். இது நான் நடிக்கும் அடுத்த படத்திலுள்ள கேரக்டருக்கான தோற்றம். எனவே, இந்த போட்டோ குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.

அந்தக் கேரக்டருக்காகவே எனக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி போன்ற வயதான லுக் தேவைப்பட்டது. அதனால், இப்போது அந்த கெட்டப்பில் இருக்கிறேன். புதுமையான விஷயங் களை துணிச்சலுடன் முயற்சி செய்து பார்ப்பது என்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. கடந்த 62 வருடங்களாக ஹாலிவுட்டில் இயங்கி வருகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மதிக்கிறேன். லவ் யூ ஆல். அனைவரும் அதிக மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருங்கள்.

The post எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: