நாங்குநேரி பெருமாள் கோயிலில் எண்ணெய்காப்பு உற்சவம்

நாங்குநேரி: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. நாங்குநேரி வானமாமலைபெருமாள் கோயில்  சிறப்பு எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. விழாவில் காலை  7 மணிக்கு விஸ்வருப தரிசனம்,   8.30 மணிக்கு மூலவர் வானமாமலை பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய்காப்பு நடந்தது. தொடர்ந்து வானமாமலை பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரபூஜை,தீர்த்த ஜடாரி, பிரசாத வினியோகம் நடந்தது.

Advertising
Advertising

மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வானமாமலை பெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம். இரவு 8 மணிக்கு வானமாமலைபெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள் வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது.விழாவில் நாங்குநேரி ஜீயர்சாமி, ஆச்சாரியர்கள்,  உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: