தமன்னாவுடன் திருமணம் எப்போது? பதிலளிக்க விஜய் வர்மா மறுப்பு

மும்பை: இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடரில் மிகவும் நெருக்கமாக நடித்ததன் மூலம் பரபரப்பு ஏற்படுத்திய தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் அதற்குப் பிறகு தங்கள் காதலை வெளியுலகிற்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது குறித்து விஜய் வர்மா பேசியுள்ளார். அவர் கூறும் போது, ‘நாங்கள் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடரில் நடிக்கும்போது டேட்டிங் செல்லவில்லை.

பிறகு ஒருநாள் பார்ட்டி வைத்தே ஆக வேண்டும் என்று பேசினோம். ஊகூம், அது நடக்கவில்லை. சில நாட்கள் கழித்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தோம். அதில் 4 பேர் பங்கேற்றனர். அப்போது துணிச்சலுடன், ‘நான் உங்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்’ என்று தமன்னாவிடம் சொன்னேன். இச்சம்பவம் நடந்த 25 நாட்களுக்குப் பிறகே நாங்கள் முதன்முதலில் டேட்டிங் சென்றோம்’ என்றார். ஆனால், தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விஜய் வர்மா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

The post தமன்னாவுடன் திருமணம் எப்போது? பதிலளிக்க விஜய் வர்மா மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: