மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கொள்ளிடம்: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், யாக பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசிவெள்ளி அன்று மாதானம் முத்துமாரியம்மனுக்கு  அலகுகாவடி, பாடைகட்டுதல், தீ சட்டி ஏந்தி, கோயிலை வலம் வந்த பக்தர்கள் கோயில் எதிர்புறம் அமைந்துள்ள தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்பொழுது மழை பெய்தது. பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தீமிதித்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

Advertising
Advertising

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கை, கால் மற்றும் உடல்வலி குணமாகுவதற்கு அம்மனுக்கு அந்த உருவபொம்மைகளை வாங்கி காணிக்கை செலுத்தினர். இதில் அம்மனுக்கு மாவிளக்கு மற்றும் கண்ணடக்கம் செலுத்தி நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்காக சீர்காழி போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை சூப்பிரண்ட் சேகர் தலைமையில் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார்,  தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: