அம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு

அம்பை: அம்பை காசிநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது. இதை திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அம்பை மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோயில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு  நேற்று காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் அம்மையப்பர் கோயில் தெப்ப மண்டபத்திற்கு வந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 21 வகையான அபிஷேகங்களும் அலங்கார சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி ரத வீதிஉலா நடந்தது.

Advertising
Advertising

தொடர்ந்து இன்று கிருஷ்ணசாமி கோயில் தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஹோமத்தை தொடர்ந்து திருமஞ்சனம், அபிஷேகங்கள், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கோயிலிலிருந்து ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி தெப்பத்திற்கு  எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் வெங்கடேஷ்வரன், சத்யசீலன், ஆய்வாளர் சீதாலெட்சுமி, நிர்வாக அதிகாரி கனகசுந்தரம், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தெப்பத் திருவிழா விழாக் கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வருகின்றனர். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இன்று சூடி கொடுத்த சுடர்கொடி என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

Related Stories: