டிசம்பர் 14 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா

சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவின் தொடக்க நிகழ்ச்சியின்போது, இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற ’அனாடமி ஆஃப் எ ஃபால்’ என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

மேலும் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள் உள்ளிட்ட படங்கள் இடம்பெறுகின்றன. அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால், விடுதலை – 1 உள்ளிட்ட தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

The post டிசம்பர் 14 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: