மணிகண்டனின் லவ்வர்

சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் (யூடியூப் சீரிஸ் ‘லிவ்இன்’ புகழ்) இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், படத்தில் மணிகண்டனின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால், எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது.

இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. குட்நைட் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த மணிகண்டன், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மாடர்ன் லவ்’ வெப்சீரிஸ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பரத் விக்ரமன். சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது. முன்னதாக மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ‘குட்நைட்’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் இக்கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது. நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

The post மணிகண்டனின் லவ்வர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: