ஃபைட் கிளப் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் படம் ‘ஃபைட் கிளப்’. இதில் ‘உறியடி’ விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி எழுதியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தினை இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் வழங்குகிறார்.

The post ஃபைட் கிளப் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: