மலையாள ஹீரோயின்கள் அறிமுகம்

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம், ‘சபா நாயகன்’. ஹீரோயின்களாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, விவியா சந்த் நடித்துள்ளனர். இவர்களில் கார்த்திகா முரளிதரன், விவியா சந்த் இருவரும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். ‘சபா நாயகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகின்றனர். இதுகுறித்து கார்த்திகா முரளிதரன் கூறுகையில், ‘இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் திரைத்துறையில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. இது ஒருவகை நாஸ்டால்ஜியா பிலிம். எல்லா வயதினருக்குமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பள்ளி, கல்லூரி, மண வாழ்க்கை ஆகிய காலக்கட்டங்களும் இடம்பெற்றுள்ளன’ என்றார். விவியா சந்த் கூறும்போது, ‘என் தாய்மொழி மலையாளம். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். ெதாடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பதால், அனைவரும் எனக்கும், என் படத்துக்கும் பேராதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். முக்கிய வேடங்களில் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஷெர்லின் சேத் நடித்துள்ளனர்.

பாலசுப்ரமணியெம், அவரது உதவியாளர்கள் தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். வரும் டிசம்பர் 15ம் தேதி படம் திரைக்கு வருகிறது. கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பில் அய்யப்பன் ஞானவேல், கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் கேப்டன் மேகவாணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

The post மலையாள ஹீரோயின்கள் அறிமுகம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: