வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடிக்கிறேன்: ஹரீஷ் கல்யாண்

சென்னை: ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம், ‘பார்க்கிங்’. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ், சோல்ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. வரும் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஹரீஷ் கல்யாண் பேசியதாவது: ஒரு படம் ஜெயிப்பதும், தோற்பதும் மக்கள் கையில் இருக்கிறது. அதற்கு முன்பு அதுபோன்ற ஒரு நல்ல படத்தை நான் தவற விட்டிருந்தால், நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.

அப்படி நான் தவறவிடாத படம், ‘பார்க்கிங்’. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்துக்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்து இயக்குனர் என் கேரக்டரை எழுதியுள்ளார். இந்த கேரக்டர் எனக்கு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் போன்ற டாப் ஹீரோக்கள் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. காரணம், அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பது முக்கியம். அந்த ஸ்பேஸை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சாம் சி.எஸ் அற்புதமாக பின்னணி இசை அமைத்துள்ளார்.

The post வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடிக்கிறேன்: ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: