லாஜிக்கை ஒதுக்கிவிட்டு பாருங்க: பில்டப் படம் பற்றி சந்தானம்

சென்னை: எஸ்.கல்யாண் எழுதி இயக்கியுள்ள படம், ‘80’ஸ் பில்டப்’. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சந்தானம், ராதிகா பிரீத்தி, ஆடுகளம் நரேன், கே.எஸ்.ரவிகுமார், நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மன்சூர் அலிகான் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசியதாவது: இயக்குனர் கல்யாண் என்னிடம் கால்ஷீட் கேட்டபோது, 15 நாட்கள் மட்டுமே பிரேக் இருக்கிறது என்று சொன்னேன்.

இதில், டாக்கி போர்ஷனை முடித்துவிடுவோம் என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். குறுகிய நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இயக்குனர் சுந்தர்ராஜன் பிணமாக நடித்துள்ளார். இறந்த பின்பு காமெடி செய்யும் கேரக்டர் அது. பெண் வேடத்தில் ஆனந்தராஜ் அசத்தியுள்ளார். இதில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின் ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். என் தங்கையாக சங்கீதா நடித்துள்ளார். அவரிடம் நான் போடும் சவால்தான் படத்தின் கதையை நகர்த்தும். 80ல் நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது.
லாஜிக்குகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், குடும்பத்துடன் பார்த்து குதூகலிக்கும் படமாக இருக்கும். வரும் 24ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

 

The post லாஜிக்கை ஒதுக்கிவிட்டு பாருங்க: பில்டப் படம் பற்றி சந்தானம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: