சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா

சென்னை: சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

The post சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: