1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த கோயில் பற்றிய கதை ‘நந்திவர்மன்’

சென்னை: ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள படம், ‘நந்திவர்மன்’. இதில் சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி நடித்திருக்கின்றனர். ஆர்.வி.சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்ய, ஜெரார்ட் பெலிக்ஸ் இசை அமைத்துள்ளார். படத்தை எழுதி இயக்கி இருக்கும் பெருமாள் வரதன் கூறியதாவது: 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த கோயில், அதில் வைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த நடராஜர் சிலை, நகைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல் கிடைத்து, தொல்லியல் துறை அதைக் கண்டுபிடிக்க ஒரு குழுவை அனுப்புகிறது. போலீஸ் சுரேஷ் ரவியும் செல்கிறார். அப்பகுதியில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கும், கோயிலுக்கும் என்ன தொடர்பு என்பது கிளைமாக்ஸ். நடராஜர் சிலை கிடைத்ததா? சிலைகள் கடத்தப்படுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டதா என்பது மீதி கதை.

The post 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த கோயில் பற்றிய கதை ‘நந்திவர்மன்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: