‘லியோ’ வெளியான பிறகு தான் ‘தளபதி 68’ பூஜை புகைப்படங்கள்: வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயைமைப்பில் விஜய் நடிக்கும் அவரது 58வது படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கவந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபு தேவா. பிரசாந்த். மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் நடிப்பது பற்றி மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

படத்தில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள் மட்டும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள். மீடியாக்களுக்கு அனுமதி அளிக்காமல் நடத்தப்பட்ட இந்த பூஜை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை படக்குழு இப்போதைக்கு வெளியிடப் போவதில்லையாம். விஜய் நடித்துள்ள ‘வியோ’ படம் வெளிவந்த பிறகே வெளியிட உள்ளார்களாம். சரவஸ்வதி பூஜை அல்லது விஜயதசமியன்று அவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது வீடியோ ஏதாவது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

The post ‘லியோ’ வெளியான பிறகு தான் ‘தளபதி 68’ பூஜை புகைப்படங்கள்: வெங்கட் பிரபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: