90’ஸ் கிட்ஸ் காதல் கதை

சென்னை: ஹரிஹரன் இயக்கத்தில் எபிக் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள படம், ‘இனி ஒரு காதல் செய்வோம்’. அஜய் பாலகிருஷ்ணா, ஸ்வேதா ஷ்ரிம்ப்டன், வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ரேவா இசை அமைக்க, பின்னணி இசையை கெவின் டி கோஸ்டா அமைத்துள்ளார். கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.

படம் குறித்து ஹரிஹரன் கூறுகையில், ‘காமெடியுடன் கூடிய காதல் கதை கொண்ட இதில் சண்டைக் காட்சிகள் கிடையாது. வில்லன் கிடையாது. அன்றன்றைய சூழ்நிலைகள் எவ்வாறு மனிதர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றன? சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய மற்றொருவரின் கருத்து எவ்வாறு மாறுகிறது என்பதை படம் சொல்கிறது. 90’ஸ் கிட்ஸ் எனப்படும் 1990களில் பிறந்தவர்களின் நட்பு, காதல், பிரிவு ஆகியவற்றையும் சொல்கிறோம். வரும் நவம்பர் 3ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

The post 90’ஸ் கிட்ஸ் காதல் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: