கவுண்டமணி படத்தில் நட்சத்திர வாரிசுகள்

சென்னை: கதையின் நாயகனாக கவுண்டமணி நடிக்கும் முழுநீள நகைச்சுவை படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. மற்றும் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமய்யா, ரவிமரியா, சிங்கம்புலி, வையாபுரி, முத்துக்காளை, மாரிமுத்து, ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்ராயன், லேகா, சதீஷ், டி.கே.எஸ் நடிக்கின்றனர். சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஹெக்டர் தர் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சாய் ராஜகோபால் கூறும் போது, ‘70க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்டமணி, செந்திலுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதினேன். பிறகு பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, சிம்ரனுடன் ‘பாய்ஸ்’ மணிகண்டன் நடித்த ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கினேன். இப்போது கவுண்டமணி நடித்து வரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறேன்’ என்றார்.

The post கவுண்டமணி படத்தில் நட்சத்திர வாரிசுகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: