மர்ம கதையில் ரிச்சர்ட் ரிஷி

சென்னை: எஸ்குவேர் புரொடக்‌ஷன்ஸ் யுகே அன்ட் புன்னகை பூ கீதா வழங்க, வினய் பரத்வாஜ் இயக்கியுள்ள படம், ‘சில நொடிகளில்’. இதற்கு முன்பு ‘காபி ஷாட்ஸ்’ என்ற ஆங்கில சீரிஸை வினய் பரத்வாஜ் இயக்கி இருந்தார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் வெளியிடும் ‘சில நொடிகளில்’ படத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள னர். லண்டனில் வசிக்கும் திருமணமான தம்பதியைப் பற்றிய மர்ம கதை கொண்ட இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுக்க லண்டனில் நடந்துள்ளது. அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

படத்தில் 5 பாடல்களுக்கு மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ரோஹித் மாட் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாலிவுட் இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி பின்னணி இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம் ஸ்டுடியோவில் சவுண்ட் டிசைனிங்கும், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் கலரில் வண்ணமயமாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

The post மர்ம கதையில் ரிச்சர்ட் ரிஷி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: