மகாநதியை விட இந்த படம் பிடிச்சிருக்கு: கமல்ஹாசன் ஓபன் டாக்

சென்னை: ‘மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது’ என ‘சித்தா’ படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், ‘சித்தா படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும், அவர்களின் மனதில் பதியும்படி இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், இறுதியில் அழுத்தத்துடன் வெளியே வராமல், இப்படியெல்லாம் நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். பெண் குழந்தை, ஆண் குழந்தையெல்லாம் தாண்டி குழந்தைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும்.

இந்த படத்தில் இயக்குநருக்கு முக்கியமான பாராட்டு என்றால், விபத்தை விவரிக்கும்போதே மூளை எப்படி சிதறியது தெரியுமா என விவரிப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு கொலையை கேமராவை காட்டாமல் முதல் தகவல் அறிக்கையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களின் மனதில் ஊன்றி நடக்க வேண்டும். ஊன்றிய இடத்தில் தடயம் பதியவேண்டும். அப்படி நிறைய தடங்கள் இருக்கிறது. படக்குழுவின் இன்ஸ்பிரேஷன் ‘மகாநதி’ என்றால் எனக்கு அதைவிட இது பிடித்திருக்கிறது. வசூல் ரீதியாக படம் வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை’ என பேசியுள்ளார்.

The post மகாநதியை விட இந்த படம் பிடிச்சிருக்கு: கமல்ஹாசன் ஓபன் டாக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: