கணவரை பிரிந்து விட்டேனா? சுவாதி பதில்

ஐதராபாத்: சசிகுமார் இயக்கி நடித்த ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், தெலுங்கு நடிகை சுவாதி. தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை திரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் நடித்துள்ள சுவாதி, பைலட்டான விகாஸ் வாசு என்பவரை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர், தனது கணவரை பிரிந்துவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து அவர் தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நவீன் சந்திராவுடன் அவர் நடித்துள்ள ‘மன்த் ஆப் மது’ என்ற தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அவரிடம் செய்தியாளர் ஒருவர், உங்கள் கணவரை பிரிந்து விட்டதாக வெளியான செய்திகளுக்கு உங்கள் விளக்கம் என்ன? என்று கேட்டார். அதற்கு பதில் சொல்ல மறுத்த சுவாதி, ‘என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுடன் விவாதிப்பதில்லை என்பது நான் பின்பற்றும் விதிகளில் ஒன்று. அதனால் உங்களின் இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது’ என்றார்.

The post கணவரை பிரிந்து விட்டேனா? சுவாதி பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: