ஹாரர் திரில்லர் கதையில் சப்தம்

சென்னை: ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன், 7ஜி பிலிம்ஸ் சார்பில் சிவா இணைந்து தயாரிக்க, அறிவழகன் எழுதி இயக்கியுள்ள படம், ‘சப்தம்’. திரைக்கு வந்த ‘ஈரம்’ படத்தை தொடர்ந்து ஆதி, அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர். ‘ஈரம்’ படத்துக்கு இசை அமைத்திருந்த தமன், தற்போது ‘சப்தம்’ படத்துக்கு இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. விரைவில் போஸ்டர், டீசர், டிரைலர் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகிறது.

The post ஹாரர் திரில்லர் கதையில் சப்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: