சலார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் ‘சலார்’. இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, டீனு ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இப்படம் இம்மாதம் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.

‘சலார்’ திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அண்மையில் படக்குழு தள்ளி வைத்துள்ளது. அதாவது, எதிர்பாராத சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

The post சலார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: