நியூயார்க்: சர்வதேச எம்மி விருதுக்கு ஷெபாலி ஷா, ஜிம் சர்ப், வீர் தாஸ் ஆகிய மூன்று இந்திய நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொலைகாட்சி சேனல்களில் சிறப்பாக பணியாற்றிய நட்சத்திரங்களுக்கு சர்வதேச ‘எம்மி’ விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான 52வது சர்வதேச எம்மி விருதுகள் வரும் நவம்பர் 20ம் தேதி நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ‘எம்மி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. எம்மி பட்டியலில் 20 நாடுகளைச் சேர்ந்த 56 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நட்சத்திரங்களான ஷெபாலி ஷா, ஜிம் சர்ப், வீர் தாஸ் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டெல்லி கிரைம் 2 தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக ஷெஃபாலி ஷா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ராக்கெட் பாய்ஸ் 2 தொடரில் நடித்த ஜிம் சர்ப், சிறந்த நடிகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடிகரும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகருமான வீர் தாஸ், தனது நெட்ஃபிக்ஸ் நகைச்சுவை தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்மி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
The post சர்வதேச ‘எம்மி’ விருதுக்கு 3 இந்திய நட்சத்திரங்கள் தேர்வு: பல்வேறு தரப்பினரும் பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.